பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

| 1

அரைக்கணம், கனவு கண்டு விழித்தவன் மாதிரி தடுமாறினன் அவன். கண்களைத் திறந் தி இறந்து முடின்ை முடி முடித் திறந்தான் இதயத் தின் இதயத்தில் ஏதோ ைதத்தது. நெருஞ்சி முள்ளாக இருக்கலாமோ? கனவாய் வந்தவள், கனவாய் மறைந்து விட்டாளோ?...

'அன்னக்கொடி,!”... அழகின் உச்சி அல்லவா அவள்! பேசும் விழிகள்! அவை அவனைப் பேசவொட்டாமல் செய்து விட்ட வேளைகள் ஒன்ரு, இரண்டா?

சிரிக்கும் உதடுகள்! - அவை அவனைச் சிரிக்க வைத்துச் சிந்திக்க வைத்த கட்டங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல.

துடிக்கும் நெஞ்சம்! அது அவனைத் துடிக்க வைத்து, வேடிக்கை பார்த்து, வேடிக்கை காட்டியது பொய் அன்று: கனவு அன்று; கதையும் அன்றுதான்!

பருவப் பண்புக்கு அவள் ஒரு புதிய அலை! அந்த அலைய்ே பாசத்தின் நேசம் கொண்டநேசத்தின் பாசம் பூண்ட ஆழியாகி, அவனைத் தத் தளிக்கச் செய்த அதிசயங்கள் மகத்தான உண்மை கள்.

அவன் தலைநிமிர்ந்தான்.