பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

# 28

விடுவது இயல்பு. இந்த நிலையில், வாழ்க்கை இலக்கியம் மாத்திரம் சுவைகொண்டு சுவையளிக்க முடியுமா, என்ன?-ஒருகாலும் இல்லை. ஆகவே தான், வாழ்க்கையில் எதிர்பாராதவை, எதிர் பாராத வகையில், எதிர்பாராத வேளைகளில் விளையாடுகின்றன போலும்!

வீரமணியின் தனித்த பார்வைக்கு மட்டுமே உரிமை உடையதான அந்த ஊதாநிற நாட்குறிப்பு, இப்போது அவனது தந்தை ஆதிமூலத் தேவரின் புதிய பார்வைக்கும் உடந்தையாகக் காத்திருக் கிறது.

ஊதா என்ருல், அதற்கொரு-மாயக் கவர்ச்சி தான்!

கையிலிருந்த நாட்குறிப்பை முன்னும் பின்னு மாகத் திருப்பினர் தேவர். என்னவோ தைத்த மாதிரி இருந்தது. நெஞ்சைத்-தடவி விட்டார். நெஞ்சில் தான் நெருஞ்சி முள் தைத்து இருக்க வேண்டும். டைரி முன்னேக் காட்டிலும் கூடுதலாகக் கனப்பதை உணர்ந்தார். கைச் சுமையை மனம் தாங்காது என்ற ரகசியம் அவருக்குப் புரிந்திருக்கும். சலனமற்றுக் கிடந்த நாட்குறிப்பையும் சலன மின்றிக் காணப்பட்ட புதல்வனையும் மாறி மாறிமாற்றி மாற்றிப் பார்வையிட்டார்; பிறகு, மென்மையாக நகைக் கிறுக்கலோடு ஏறிட்டார். 'தம்பி வீரமணி, உன்னேட சொந்த அந்தரங்கத் துக்குக்-காணியாட்சிப் பாத்தியம் கொண்டது இந்த டைரி. ஆகச்சே,நான் அந்நியத்தன்மையோட