பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

I 30

என்று வாய் திறந்து நகைத்தார்; என்னவோ ஒரு போலித்தனமும் ஊடாடாமல் இல்லை.

இடம், பொருள், ஏவல் எல்லாம் விளங்கும்; எனவே, வீரமணிக்குச் சிரிக்கவும் தெரியும்! -

இராச் சாப்பாடு முடித்தானதும், யாடு தீர நிலா முற்றத்தில் அயர்ந்து பேசிக் கொண்டிருக் கலாமென்று குறிப்புணர்த்திய பிற்பாடு, நடையைக் கடந்து நடை தொடர்ந்தார் மூத்தவர்.

'ஒட்டுவாரொட்டி'த் தன்மை கொண்ட சீக்கு கள் சிலவற்றை நிர்ணயப்படுத்தி ஒதுக்கி வைக் கிறது உடற்கூறு. -

இவ் விதிக்கு உள்ளக் கூறும் விலக்கல்ல.

வீரமணி தனியாய்த் தவித்து, தண்ணிராய் உருகிக் கொண்டிருந்தான். நெஞ்சு களம் கண்ட நோய் வாட்டியது; வதக்கியது. மாலையில் மட்டுமே மலரும் இந்நோய் என்பதன்று. தாபமும் தாகமும் சுழியாகச் சுழித்தன. அம்மான் மகளே அன்னம்!" -உதடுகள் துடித்தன. வாடிக்கை மாருமல், வாடிக் கையை மாற்ருமல் புன்சிரிப்பும் பெருமூச்சும் விளை பலன் காட்டின. அன்னக்கொடியும் சாதி மல்லி கைப் பூவாக மலர்ந்து, தழலாக நெடுமூச்செறிகின் ருளோ? முறைமைப் பெண் அன்னத்தின் நினைவே அவனுக்கு உரமாகவும், அவளது கன்னி மனமே அவனுக்கு உயிராகவும், அவள் உயிரே அவனுக்கு மனச்சான்ருகவும், அவள் இயங்கியும் இயக்கியும் விளங்குகின்ற அதிசயத்துக்கு ஆதார சுருதி யார்?