பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

出器夏

அவனு? அவளா? இல்லை, அவனும் அவளுமா?ரோமப் புல்லரிப்போடு அவன் தலையை நிமிர்த்தி ன்ை. புதிதாய்ப் பிறந்த பக்குவம் கிளர்ந்தெழுத் தது. இரவு அப்பா விடுகதை போடப் போகிருரா? இல்லை, எதிர்பார்ப்பது போலவே நல்ல தீர்ப்பு வழங்கப் போகிருரா? அன்னம் கால் பாவினல் தான்-வலது காலே எடுத்து வைத்து இந்த வீட்டின் திட்டி வாசலை அம்மான் மகள் அன்னம் மிதித்தால் தான், இந்த மச்சு வீட்டின் தாய் வீட்டிலே நல்ல விளக்கு எரிய முடியும் அப்பாவுக்கு இந்த உண்மை -யதார்த்தமான உண்மை பிடிபடாமலா இருந்து விடப் போகிறது? ஒருவேளை, அப்பா புதிர் போட்டுப் புதிராகி விட்டால்...? அட்டகாசமாகவும் ஆவேச மாகவும் சிரிப்பு வெடிக்கத் தலைப்பட்டது-உள்ளத் தின் உள்ளத்திலே!

'சொக்க வெள்ளிப் பாற்குடம்' ஆகாயக் கடலில் மிதந்து கொண்டிருக்கிறது.

சுருள் முடிகளை ஒரு தட்டுத் தட்டிக் கோதி விட்டான் வீரமணி. இனிமேல் ஈரம் உலர்ந்து விடும். அணி சேர்ந்த தீவட்டிகளென நிலவில் ஒளிர்ந்த தீப்பூக்களே அலாதியான திடத்தோடு அனுபவித்த வாக்கில் உள்ளே வந்தான். ஆடியில் அவன் முகம் ஆடியது. அவன் முகம் மட்டிலுந்தான் ஆடியதா? " . . . .

கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, தோழர்கள் வந்து சேரக் காளுேம். மாணிக்கம் கூட முகம் காட்டவில்லை. வந்திருந்தால், ஊர்த் தாக்கல்