பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

l. 3.5

வெண்ணிலவுக்கும் பூங்காற்றுக்கும் மாத்திரமே பார்வையாளர் அனுமதிச் சீட்டுக்கள் வழங்கப்பட் டிருந்தன. . .

ஊர் நாட்டாண்மைத் தலைமையாளர் ஆதி மூலத்தேவரும் தேவரின் மகன் வீரமணியும் என்னவோ ஒரு நூதனமான உட் குறிப்போடு: ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள். குண்டுசி விழுந்தால் சத்தம் கேட்கும். ஆனல் சத்தம் கொடுத்துக் குண்டுசியைக் கொள்முதல் பண்ணி, அதை வீசிச் சோதித்தும் பார்க்கத் தந்தைக்கும், தனயனுக்கும் பொழுது இல்லை. அவர்களுக்குத்தான், தலைக்கு மேல் என் னென்னவோ சோதனைகள் கண்ணுமூச்சி ஆடக் காத்துத் தவம் கிடக்கின்றனவே! }

ஏப்பம் பரிந்தது. இன்னுெரு மிடறு தண்ணீர் பருகிவிட்டு, கும்பகோணம் தளிர் வெற்றிலே களில் ஒர் அடுக்கை எடுத்து இடது கைப் புறத்தில் அடக் கிக் காம்பு கிள்ளி நரம்பு உரித்தார்; கொத்துச் வேலை, கருடன் தவளையைக் கொத்துமே அப்படிக் கொத்தி கடை வாய்க்குள் திணித்தார். வாசனைச் சுண்ணும்பு கூடியதுதான் சமயம்; அரக்குச் சிவப்பு கைகூடியது. மஞ்சள் கடுதாசித் தாளில் பளபளத்த புகையிலையில் முணுங்கலச் சலித்துத் தட்டி வீசி விட்டு மிகுந்ததை மிகுந்த ரசனையோடு வாயில் அடக் கிக் கொண்டார்; பிறகு, முதல் எச்சிலைப் பணிக்கத் தில் துப்பி விட்டு, தொண்டையைக்கனத்தபடி அட்டணைக்கால் போட்ட வண்ணம், என்னவோ