பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

#37

ஆனதாலே, இம்மாங் கொத்த அருமைக்கும் பெருமைக்கும் உரிமை கொண்ட உன்கிட்டேஎன்ளுேட குலத்தை வீடும் விளக்குமாய் விளங்க வைக்க வேண்டிய கடமை கொண்ட உன்கிட்டே ஒரு நல்ல சேதியை - ஒரு மங்களகரமான சேதி: யைச் சொல்லிப்புட வேணும்னு நான் தவிச்சிட் டிருக்கேன்!...”

"மெய்தானுங்க, அப்பா!' தேவர் தொடர்ந்தார்:

"வீரமணி, இ ந் த நாட்டாண்மைக்கார ஆதிமூலத் தேவன் ஆட்டிலே, எப்பவும்ே விளக் குக்குப் பஞ்சப்பாடு இருக்காது. அங்கிட்டு நடை யிலே காமாட்சியம்மன் விளக்கு எரியுது; இங்கிட்டாலே, போன சங்கராந்திக் கெடுவுக்குப் போட்ட 'எலெக்கட்டரி விளக்குங்க ரெண்டு கை வீச்சுக்கு எட்டி எரிஞ்சுகிட்டு இருக்கு. ஆணு, அந்தாலே அந்தத் தாய்வூட்டிலே பதினேஞ்சு பதினறு வருஷத்துக்கு முந்தி அல்லும் பகலும் மங்களகரமான சுபீட்சத்தோடே எரிஞ்சுகிட்டு இருந்திச்சே ஒரு நல்ல விளக்கு’, அந்த விளக்கு மட்டும் எரியாமல் இம்புட்டுக் காலமாய் அணைஞ்சே தரிசாய்க் கிடக்கு து! அந்த நல்ல விளக்கை ஏற்றி வச்ச திருவிளக்கே அனேஞ்சதுக்கப்பாலே, அது மாத்திரம் எப்படி எரியுமாம்? ...என்னுேட ஆசை வள்ளியம்மை - உன்னேட ஆத்தா வள்ளியம்மை கண்ணை மூடின. எல்லாமே அத்தமிச்சுப் பூடுச்சு: ஊம்! இப்பைக்கு வெளிச்சம் மடைத் தண்ணியாய்