பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

I 2

அவன் நினைவுகள் தலைநிமிர்ந்தன.

'அன்னக்கொடி!...... அம்மான் மகளே அன்னம்!”

விளைந்தவை:

புன்சிரிப்பு!

பெருமூச்சு!

அவனும் அவளும் துள்ளித்திரிந்த காலத்திலே, 'அம்மான் மகளே!-அத்தை மகனே!” என்று உறவு சொல்வி உறவு கேட்டும், உரிமை கோரி உரிமை பெற்றும் இணைச்சிட்டுக்களாக மணல் வீடு கட்டி, தாயம் போட்டு, ஆடிப் பாடிக் கொண் டாட்டம் போட்ட நிகழ்ச்சிகள், காலக்கருவூலத்தின் அன்புச் சேம நிதிகள்தாம்!

காலம் ஒரு புள்ளிமான்,

பருவம் திரைகிழித்துத் திரைவிரித்த நாட்கள் அவை; பச்சைக்கொத்துமல்வியாக மணம் கூட்டும்.

மதுக்குடம் ஏந்திய மணமலராக அவள் வந்தாள். அத்தான், நான் இப்ப முன்னை மாதிரி இல்லை. நாம் சதா கண்டு தண்டிக்கிட இனி வாய்க் காது. நம்ப சாதி சமுதாயக் கட்டுதிட்டம் அப்படி. ஒரு அந்தரங்கத்தை உங்க நெஞ்சுக்கு நீதியாய் ஒப்படைச்சாகணும். எனக்கிண்ணு ஒரு குடும்ப வாழ்க்கை லவிக்க வேணும்னு விதிச்சிருந்தால், அந்தப் பாக்கியம் நீங்க எனக்கு இடுற அன்புப் பிச்சையினலேதானுங்க கிட்ட முடியும்! இந்த