பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

1 4 |

ஒரே மூச்சில் அடைச்சிப்புட மாட்டோமா? செல்லேன், தம்பி!'

மேல் மூச்சும் கீழ் மூச்சும் கால் இடறின. பெரியவர் நெற்றியைத் தடவிக் கொடுத்தார்.

வீரமணி ஐம்பது சதவிகித அளவிற்கு ஆறுதல் கொள்ள முயற்சி செய்தான்.

"அப்பா! என்னேட திட்டப் பிரகாரம், நீங்களும் நம்மோட வெள்ளாமை விளைச்சல் சம்பந் தமான சீரமைப்பு, சீர்திருத்தத்திலே ஒரே மாதிரி யான கருத்து வச்சிருக்கீங்க. அந்த அளவிலே நான் ஒரளவுக்கு மனச் சாமாதானம் கொள்ளுறதுக்கு வழி உண்டு. ஆன. இப்போதுள்ள சோதனையான சந்தர்ப்பச் சூழ் நிலையிலே, மண் பிரச்சினையைக் காட்டிலும் நம்ப குடும்பத்தோட மானப் பிரச்சினை தானுங்களே உச்சமாய் அச்சுறுத்திக்கிட்டு இருக் குது? கடன் கழிஞ்சா, காற்றுப் போலே! நாம தலை மேலே சுமக்க மாட்டாமல் சுமந்துக்கிட்டு இருக்கிற கடன் சுமையை வழி தேடி, வழி கண்டு பிடிச்சு அடைச்சால்தானுங்களே, நம்ப குடும்பத் தோட மானம் மரியாதை பிழைச்சு, நாமளும் ஊர் நாட்டிலே தலை நிமிர்ந்து நடக்க ஏலும்? அப்பத் தானுங்களே, என் மன்ச் சுமையையும் இறக்கி, உங்க மனக் கனவுப்படி, நானும் தன்மானத்தோடே தலை நிமிர்ந்து மணவறையிலே குந்தவும் என் மனசும் இடங் கொடுக்கும் அப்பத்தானுங்களே, என்ைேட கடமைக்கு நீங்க சுட்டிக் காட்டின சத்தியமும் தருமமும் ஒரு முழுவடிவம் காண