பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

i 42

வாய்க்கும்? உங்களுக்குள்ள ரோசம், வைராக்கியம் எல்லாம் எனக்கும் இருக்காதுங்களா, அப்பா?”

உணர்ச்சிகளுக்கு மனம் விட்டு, வாய் விட்டுப் பேசத் தெரியும். -

தேவர் சிரித்தார். -

அப்பா புதிர் போடப் போகிருரா, என்ன? அழகான விழிகள் அழகாக ஊடுருவின.

'அடி சக்கை! போடு பகடை பன்னெண்டு அப்படின்னு சொன்னனும்! அப்படியே கச்சிதமாய் விழுந்திடுச்சாம். சொக்கட்டான் ஆட்டம், வெற்றி முகம் காட்டக் கேட்க வேணுமா? தம்பி, வீரமணி! இப்பத்தான் எனக்கு நல்ல மூச்சு வருதாக்கும்.! உன் ரோசமும் வைராக்கியமும் எனக்குத் தலைகீழ்ப் பாடம் தான். அட்டியில்லே! உன்னேட லட்சியப் படி, நாம பட்டிருக்கிற கடன் கப்பி சகலத்தனையை யும் ஆவணி பிறக்கிறதுக்குள்ளாற எப்பாடு பட்டாச்சும் நான் அடைச்சுபிடுவேன்! இனிமே அந்தக் கவலை உனக்கு வேண்டியதில்லே! அப்பானே ஆவணி பிறந்தடியும் நீ மாப்பிள்ளே முறுக்கோடே மணவறையிலே தலை நிமிர்ந்து குந்துறதுக்கு அட்டி ஏதும் கிடையாதே?’

இதயத்தைத் தடவிக் கொடுத்த வாக்கில் விச்ைசரம் தொடுத்தார் மச்சு வீட்டுக்காரர்.

    • s2sit&.uò! ... * *