பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

143

வீரமணிக்கு வெட்கம் வந்து விட்டது. வெட்கம்! சாண் பிள்ளையானலும் ஆண்பிள்ளை தான். அதற்காக, வெட்கம் வரக் கூடாதென்று சட்டமா, விதியா?- அன்னக்கொடி!... அம்மான் மகளே, அன்னம்!

'பெரியவருக்கு வெட்கம் எதுவும் வந்துவிட வில்லை. ஆனலும் அவர் சிரித்தார். சிரித்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தார்:

'என் தங்கக் கம்பிக்கு வெட்கம் வந்து தொலைச்சிருச்சாங் காட்டி ஊம்...வீரமணி, நான் இப்ப சொல்லப் போற நல்ல சேதியைக் காதிலே வாங்கிக்கிட்டு, பின்னடி தனியே ஒடிப்போய் குந்திக். கிட்டு, அந்த நல்ல சேதியை நினைச்சு நினைச்சு வட்டி யும் முதலுமாய் வெட்கப்பட்டுக் கிட்டு இரு நான் உன்கிட்டே சொல்லிப்புடத் துடிச்சுத் தவிச்சுக் கிட்டு இருந்த அந்த நல்ல சேதி-மங்களகரமான சேதி இதுதான்: மகனே வீரமணி! அக்கம் பக்கம் பதினறு தலைக்கட்டுக் கிராமங்களுக்குத் தலைமை. கொண்ட சிலட்டுர்க் கங்காணியார் பெரிய கறுப்பத் தேவரோட ஒரே மகளான பவளக் கொடியை உனக்காகப் பெண் பார்த்ப் பேசி முடிச்சிருக் கேன், தம்பி!' - - -

ஆதிமூலத் ேதவரின் புதிர்ப் பேய்ச் சிரிப்பிற்கு நிகராக அவரது அருமந்தப் பிள்ளை வீரமணிக்கும் சிரிக்கத் தெரிந்தது அப்படியொன்றும் பேரதிசயச் செய்தி அல்ல!