பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

9. பொற்பின் செல்வி அன்னக்கொடி

விடித்தது- பொழுது. இரவென்ருல், பகல் வரும். நிலவென்ருலும், பகல் வருவதும் மரபுதான்!

ஆகவே, மரபைக் காத்து விடிந்த இளங்காவை வேளை இது.

மரபைக் கட்டிக் காப்பாற்றிப் பேணும் ரக சி ய ம் இயற்கைக்குத்தான் .ெ த ரி யு ம் என்பதல்ல; இந்த மச்சு வீட்டுக்கும் தெரியும். அதன் காரணமாகத்தான், விடி வெள்ளி முளைத் ததுமே, துயில் கலந்து கண் விழித்து விட்டது இவ்வீடு,

நயம் தோய்ந்த விழிகளை நயமாகக் கசக்கிக் கொண்டே வீரமணி திட்டி வாசலை ஒட்டி வந்து நின்ருன். அழுகின்ருனு அவன்? ஊகூம்; இல்லை! பின், அவன் ஏன் கண்களைக் கசக்குகின்ருன்?-'துரசு தும்பட்டை ஏதாகிலும் பட்டிருக்கும். புளி போட்டு விளக்கப்பட்ட பித்தளைச் செம்புகள் மாதிரி அவன் கண்கள் விளங்கின. கண் கொட்டும் பொழுதுக்குக் கூடக் கண்ணக் கொட்டாமல், கொட்டக் கொட்ட இரவு பூராவும் விழித்திருந்து தவம் செய்த அந்தரங்கம் அவனுக்கே வெளிச்சம் போலும்! அழகான முகத்திலே, அழகான வெப் 'யில் அடித்திருக்கும். கண்களை மூடி மூடித் திறத் தான்; திறந்து திறந்து மூடினன். கண்கள் மூடில்ை என்ன? திறந்தால் என்ன? ஒர் இமைப்பொழுது