பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

1 3

விதியை எப்பேர்ப்பட்ட சோதனையிலேயும் நான் சத்தியமாய் மறக்க மாட்டேன். அதே கணக்கிலே, நீங்களும் மறந்துப்புடாதீங்க, அயித்தைமகனே!...” என்று மனம் உருகி வேண்டிக் கொண்டாள் அன்னக்கொடி. பூவும் பொட்டும் புது வெள்ள மாகப் பொலிந்தன!

- உள்ளம் தொட்டவளின் பேச்சு அவன் உள்ளத்தைத் தொட்டது. மேனி புல்லரித்தது. பார்வை கூடு விட்டுக் கூடு பாய்ந்தது. கண்கள் பொடித்தன. எனக்கு உயிரே நீ தானே, அம்மான் மகளே?...என்னுேட உயிருக்கே நீதானே நாற்றங் கால், அன்னம்?...உன் சத்திய வாக்குத்தான் எனக்கு மனச்சாட்சி! இந்த அந்தரங்கம் தான் உன்னேட நெஞ்சுக்கு நீதி! இந்த மணவாழ்க்கை தம்ம அளவிலே சத்திய சோதனை மாத்திரமில்லே; அக்கினிச் சோதனையும் கூட!...இந்தச் சோதனை யிலே தேறி, நாம ரெண்டு பேரும் நம்மோட மன வைராக்கியத்தோடே,இந்த ஊர் மண்ணிலே ஜோடி யாய் வாழ்ந்து காட்டினுல்தானே நம்பளோட பாசத்துக்கும் நேசத்துக்கும் நல்ல அர்த்தம் கிடைக்க வாய்க்கும். அன்னம்?..."என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசினன், அவன். அவன் வீரமணி. அவள்-அன்னக்கொடி மெய்ம் மறந்தாள்.

"அன்னம்! ...அன்னம்! ...'

அன்னம் தான் சிரித்தாளா?

சிரித்தவள் அன்னமேதான?