பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

148

ரோட ஒரே மகளான பவளக்கொடியை-அவ ரோட செல்லக்கிளியான அழகி பவளக்கொடியை உனக்காகப் பெண்பார்த்துப் பேசி முடிச்சிருக் கேன், தம்பி!-அப்பாதான் இவ்வாறு தீர்ப் புப் படித்தாரா?- சிந்திச் சிதறியது வேர்வை தானே?

தோட்டம் துர்வுப் பக்கம் நாடி மீண்ட பெரி யவர், வேப்பங்குச்சியை வீசிவிட்டு, வாய் கொப் புளித்தார்.

"வீரமணித் தம்பியோ! தோண்டத் தோண்ட குழி மாளாது; சூட்டோட சூடா இட்டிலியைச் சாப்பிடலாம், வாப்பா. இண்ணேக்கு கொத்தமல் லித் தழைத் துவையல் வேண்டாம்னு காசிகிட்டே ஆடர் போட்டாச்சு. சீமைக் கத்தறிச் சட்டினி பண்ணியிருப்பான்!...'

“ஊம்!'-மோதிர விரல் மோதிரத்தைத் தளர்த்தின்ை இளவட்டம்.

நேற்று நிலா மலர்ந்த வேளையில் அந்த நல்ல சேதி'யைத் திருவாய் மலர்ந்தருளிவிட்டு, அதே சூட்டோடு எழும்பிப் படுக்கப்போன அப்பா இப் போதுதான் திரும்பப் பேச்சுக் கொடுத்திருக்கிருர்! ரத்தப் பூக்கள் பொன்சிவப்பாகச் சிவிர்க்கின் றன! - -

அதிர்வேட்டாக வெடித்தது ஏப்பம்:அவனுக்கே சகிக்கவில்லை. வெட்கமாகப்போயிற்று. இந்த லட்சணத்தில், விக்கல் வேறு. லோட் டாவை எடுத்தான்; மறுகினன், வீரமணி. - -