பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

I 5ひ

கப் பொறுமையா இருந்திட்டேன்! இவனுக்குக் கொடுக்க வேணும்னு தீர்ப்புச்சொன்ன கடன்கப்பி சனியன இந்தக் கிழமைக்குள்ளாறவேசு- அடைச் சிடலாம். அந்த நயவஞ்சகனுக்கு நான் கொடுக்க கடமைப்பட்டிருக்காத அமைத்துப் பணம் ரூபாய் ரெண்டாயிரத்துக்கு அவன் என்கிட்ட எப்பவா னும் ஒரு நாளேக்கு சவாப் சொல்லாமலா அவனே விட்டிடுவேன்?... கசந்த நினைவுகள் ஊமைக்காயங் களாக வலித்தன. பெருமூச்செறிந்தார் பெரியவர்.

செவலை உறுமுகிறது.

தேவர் இரண்டாந்தடவையாகவும் செவலையை அன்புடன் தட்டிக் கொடுத்தார். ரோசக்காரச் செவலை, ராமையாத் தேவரின் பயந்தாங்கொள்ளி வெள்ளையின் மானத்தை வாங்கிவிடவில்லையா?

தந்தையின் பரிவுடன் கூடிய செய்கையைக் கண்ட வீரமணிக்கு விவரம் புரிந்தது. அம்மானின் வெள்ளைக்காளையை எதிர்த்துச்சாடி, ரோசத்தோடு வெற்றி கொண்டதை எண்ணித்தான், தன் தகப்ப ஞர் செவலைக் காளையின் முதுகில் தட்டிக் கொடுக் கின்ருர் என்கிற காரணம் அவனது ரோச உணர்ச் ஒக்கு இதமளித்ததில் அதிசயம் ஏதும் இல்லைதான். பகைமை மறக்காத அவன் உள்ளத்தில் அவனு டைய தாய்மாமன் ராமையாத்தேவர் எட்டி நின்ருல் கூட. எட்டியாகக் கசக்காத நேரம் உண்டா? அம்மாைேட கடனே அப்பா எப்படி உளவடைக்கப் போருங்க?- ஊம், புதிரென்ருல் அது என்றேனும் விடுபட்டுத்தான் ஆகவேண்டும்.