பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151

翼5夏

பெரியவர் மயிர்க்கால்கள் குத்திட்டுநின்ற முகத் தைத் துடைத்துக் கொண்டார்; பிறகு, புதிய ஊட்டம் பெற்றவராக, மேனியைக் குலுக்கிக் கொண்டார். அடுத்து இளஞ்சிங்கமென ஏதோ ஓர் இறுமாப்போடு வண்டியில் தாவிக் குந்தினர். கைப் பிடிப்பில் மாட்டின் மூக்குக் கயிறு உடும்பாகப் பற்றிக் கிடந்தது. "வீரமணி, நான் சிலட்ர்ே வரைக்கும் போயிட்டு, உருமத்திலே திரும்பிடப் பார்க்கிறேன். நாச்சி அசமந்தம். தார்க்குச்சி போட் டால் தான் அவனுக்குச் சுறுசுறும்பு வரும். நீயும் அவன்கூடவே வயல் வெளிப் பக்கம் ஒரு பயணம் போய்ப் பார்த்துக்க. உடையவன் இல்லாங்காட்டி எதுவுமே ஒரு முழம் கட்டைதான்!... நான் மத்தியான்னச் சோத்துக்கு வார்து ஈரெட்டுத்தான். அஞ்சாறு சோத்தை உண்ணிட்டு, சாப்பிட்டேன்னு பேர் பண்ணிடாதே நீ. நல்ல நிம்மதியோட நல்லாச் சாப்பிடணும். ஆவணி வாசலுக்கு வந்துக் கிட்டிருக்குது. ரோசிச்சுக்க. நான் போயிட்டு: வாரேன்”, என்ருர். தாழ்ந்த கண் பார்வையைத் திருப்பினர், வண்டியை ஒடித்துத் திருப்பினர்,

கொஞ்சும்;சலங்கைகள் கொஞ்சின. திகில் தீச்சுடராகச் சுடுகிறது.

"சம்பந்தம் சாடிக்கையை மனசிலே கமுக் கமாய் முடி போட்டு வச்சுக்கினுதான் போலே, அப்பன்காரர் நேற்றைக்கும் சிலட்டுருக்குப் பயணம் வச்சிருக்க வேணும். இப்பைக்கும் அந்த முகாத் தரத்தின் பேரிலே தான். புதுசாய்ச் சம்பந்திச்