பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

1 4

விண்ணைத் துறந்தோ, மறந்தோ ஆவணத்தாங் கோட்டைக்குச் சொந்தமான தாய்மண்ணை மிதித் தான் வீரமணி. உள் மனத்தில் உள்வட்டமாக விம்மல் வெடித்தது. தலையை உயர்த்தினன்.சூன்யம் கொக்கரித்தது. அறுவடையான வயல் வெறிச் சோடிக் கிடக்குமே, அப்படி மனம் தவித்தது. அவன் சுழலை மறந்தான்; சூழலை மறக்கவில்லை. கலக்கமும் நெகிழ்ச்சியும் சிந்த, ஏக்கமும் உருக்கமும் சிதற, மடங்கினன்!-அவன் தற்சமயம் புதிய வீரமணி!

தேநீர் வந்தது. குடும் சுவையும் கமழ்ந்தன. "டீ குடிங்க, வீரமணி அண்ணே!' “ஆகட்டும், மாணிக்கம்!'

வீரமணி தேநீர்க் கோப்பையை ஏந்தியவாறு, நாலா பக்கமும் கண்ணுேக்கம் பதித்தான். சேக் காளிகள் கோப்பையும் கையுமாக, கும்மாளமும் குமிழ் சிரிப்புமாக விளங்கிய காட்சியைக் காணக் காண, அவனுக்கு இதமாக மட்டும் அல்ல, இன்பமா கவும் இருந்தது. "எல்லாரும் குடிங்கசாயாவை!...” என்ருன். பேச்சின் நாணயமான சாதுர்யம் அவனுக்கு நமட்டுச் சிரிப்பை உண்டாக்கியிருக்க {ál) [fLf).

தலைவாசலில்-தயங்கித் தயங்கி வந்து நின்ற சாம்பான், 'முதலாளி, கனமாய்த் துரள் போட்டு ஒரு கோப்பி குடுங்க,' என்று கேட்டான் பணிவன் போடு. - -