பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159

1 5 9

'ராமையாத் தேவராய்யா, நான் உங்ககிட்டே வாங்கின கடன் வள்ளிசாய் நூறே நூறு ரூவா தான். ஆளுக்க, நீங்க எங்கிட்டே நோட்டிலே கை நாட்டுப் போட்டு வாங்கினதோ ரூவா நூத்தி அம்பதுக்கு! வட்டிவாசிக் கூடுதலைப் பூரிக்கச் சட்டம் எடம் குடுக்காதின்னும், அந்த மூணு வட்டி வீதத்தைச் சரிக்கட்டத்தான் நூத்தம்பதின்னு நோட்டிலே சொல்லியிருக்குதின்னும் சித்திரமாச் செப்புனிங்க. உச்சாணியிலே குந்தியிருக்கிற ஒங்க. வாக்கை நடுத்தெரு ஏழை நம்பாட்டி, சும்மா விடுவீங்களா? ஆளு. இப்ப காலாவதிக் கெடுவுக்கு புரோ நோட்டுப் படிக்கி ரூவா நூத்தம்பதுக்கு வக்கீல் ஐயா கிட்டே வக்காலத்துக் குடுத்து நோட்டீசு குடுத்திருக்கீங்க!...தெய்வம் திருவுளத் துக்குப் பயந்து மறுமூச்சும் சொல்லிப்பிட்றேன். நீங்க கை நீட்டித் தந்த அசல் ரூவா நூறையும் அதுக்குண்டான பேச்சு வட்டியையும் வாங்கிக்க. மாட்டேன்னு செப்பிட்டிங்க. அப்ட்டீன்ன, எம். மேலே தாவா தொடுத்துக்கிடுங்க! விதி என்னை என்ன செஞ்சிப்பிடும்னு எனக்குத் தெரவிசாய்த். தெரியும். அனுபவிச்சிக்கிறேன். அச்சமில்லே. கேவலம், அம்பது ரூவாய்க் காசினலே நான் செத்துப்பூட மாட்டேன். ஆன, அதே அம்பது ரூவாய்க் காசிஞலே ஒங்க சத்தியம் நாக்கைப் புடுங்கிக்கிட்டுச் ஈெத்துப் பூடுச்சு என்கிறதை மட்டுக்கும் மறந்துப்புடாதீங்க! நான் வாரேன்!...”

பச்சைக் குறவன் பழனி, தர்மத்தையும் சத்தியத்தையும் முச்சந்தியில் அந்தரமாக நிறுத்தி