பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

} { {ን

விட்டு நடந்தான். சத்தியத்தையும் தர்மத்தையும் முச்சந்திச் சரக்காக்கி வேடிக்கை காட்டி, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராமையாத் தேவரை ஏறெடுத்துப் பார்க்காமல் நடந்து கொண் டிருந்தான் அந்த ஏழை,

அநியாயமாகக் கசையடிபட்ட மா தி ரி, வீரமணி தவித்தான். பாவம், சட்டம் அவனை இங்கேயும் சோதித்து, அவன் வாயைக் கட்டி விட்டது. நடைப் பிணமாகி தடை தொடருவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அண்ணலே! சத்தியத்தையும் தருமத்தையும் அநியாய விலை கொடுத்து வாங்கத் துணித்திட்ட சமுதாயத் துரோகிகளுக்கு நடுவிலே இனியும் உயிர் தரிப்பது பாலமென்று முடிவு செய்துதான் எங்களிடமிருந்து விடுதலை வாங்கிக் கொண்டீர்களா?-நெஞ்சைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு புளிய மரத் தடியைப் பிரித்தான். 'மாணிக்கம்! வா, வா!' என்ருன் வீரமணி.

மழை வெய்யில் எரிக்கிறது. ஆடிக் காற்று இனிமேல், கொம்பு சுற்றி அடிக்கத் தொடங்கிவிடும்!

0. மண்ணும் மனமும் ஒரே கட்சி மண்ணின் வாழ்க்கையும் ம ன த் தி ன் வாழ்க்கையும் ஒரே காட்சி! -

மண் வளம் பேணி, செய்நேர்த்தி பண்ணி, முறையாக விதை நெல் தூவி, நீர் பாய்ச்சி