பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

I 62

அப்படியென்ருல், சோதனைகளை வெற்றி கொண்ட பிறகு தான், மண்ணும் மனமும் வெற்றி கொள்ளுமா?

ஆம்.

அதனால் தான், வாழ்க்கையைச் சோதனையாக வும்,சோதனையையே வாழ்க்கையாகவும் கொண்டும் கண்டும் பேசுகிருர்கள்; பேசுகிருேம்.

வேடிக்கையான சோதனை!...

விந்தையான வாழ்க்கை!...

இவ்வாறு, அவனுக்குச் சொந்தமான மண்ணில் கால்பாவி நின்றவண்ணம் சிந்திக்கலாளுன் வீரமணி மண்ணும் மனமும் விருந்து படைக்கக் கேட்க வேண்டியதில்லை தான். உருமப் பொழுதுக்கு வந்தவன் அவன்; இப்போது இரணிய வேளையும் அண்டிவிட்டது. வெட்டிச் செய் நிலப்பரப்பில் நின்று எலுமிச்சையம்மன் கோயில் உள்வாய் திடலை நோக்கினன்; ஆர்வம் மேலிட, பாசம் தாளிட நோக்கினன். அவனது குடும்பத்திற்குக் காணி யாட்சி உரிமையும் உறவும் கொண்ட குறுந்தடி, மணியக்காரன் வெளி முதலான வயல் தாக்கு களைக் காணக் காண, அவன் தன்னையே மறக்க லானன். அந்த வயல் வெளிகளிலே தழைக்கலவை களும் சாணக்குப்பைகளும் மட்டுந்தான அவன் பார்வையில் சிக்கின? இல்லை; அறுவடைப் பருவத் தில் உருவம் காட்டித் தோன்றும் பொன்மணி நெற்கதிர்க் கொத்துக்கள் அல்லவா அவன் மனத்