பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

A 6.3

திரையில் படம் காட்டின! அவன் அறுவடைச் சமயங்களிலே ஆனந்தம் கொண்டாடுவானே, அந்த ஆனந்தம் இப்போதும் கொண்டாட்டம் போட்டது. இன்று வெறும் வயல்களாகத் தோன்றும் இந்த நிலங்களேல்லாம் நாளைக்குத் தழைத்துச் செழித்துச் சிரிக்கத் தலைப்பட்டு விடும். மண்ணின் மகிமையை உணர்ந்து, மண்ணின் அவசியத்தை அறிந்து, மண் ணுக்கும் மனத்துக்கும் ஊடாக ஒர் ஒருமைப்பாட்டுப் பாலம் அமைக்க வேண்டித்தான் அன்றே பராசக்தி யிடம் காணிநிலம் கேட்டிருப்பானே பாரதி?

நிழல் நீள்கிறது.

நடை தொடர்கிறது.

ஒற்றைக் கடைப் பாலத்தடி? எருக்கலக் கோட்டைக் கண்மாய், சோளக்கொல்லைச் சதுக்கம், சந்தைப்பேட்டை, கீழக் குடியிருப்புக்கடை வீதி, மேலக் குடியிருப்பு ஒற்றையடித் தடம்-இப்படியாக, காலத்தையும் துாரத்தையும் கடந்தான் அவன்.

அந்திப்பொழுது வந்தது.

மச்சு வீடும் வந்தது.

அவன்-வீரமணி நீள்மூச்சை நீளமாக வெளி யேற்றினன். திட்டி வாசல் உறுத்தியது. நெஞ் சத்துச் சுமையை இந்நேரம் மறந்திருந்தான் அவன். உண்ட சோறு போன மாயம் தெரியவில்லை. அவனுடைய மண் அவனுடைய மனத்திலே ஊட்டி அனுப்பிய மகிழ்ச்சி, அமைதி, நிறைவு எல்லாவற். றயுைம் உண்ட வீடு அபகரித்துக் கொள்ளுவதா?