பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

1.65

திருப்பூந்துருத்தியில் அம்பாள் சிலையொன்று காணுமற் போய்விட்ட செய்தியைக் கேள்விப்பட் டான் அவன். அது இப்போது செய்தியில் அடை பட்டிருந்தது. தெய்வத்தின் தலையில் கை வைத்த சமுதாயக் குற்றவாளி இதற்குள் சட்டத்தின் விலங்குக்குக் கட்டுப்பட்டுத் தலைமேல் கை வைத்துக் கொண்டிருப்பான்!

இடைச் செருகல் பாடல் மாதிரி, தந்தி யொன்று நாளேட்டில் செருகி வைக்கப்பட்டிருந் தி து.

அன்புத் தமிழரசி வாழ்த்தியிருக்கிருள்.

அவன் மறுபடி சலனத்தின் கைதி ஆளுன். தமிழரசிக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை தன் அன்புத் தந்தையின் புதிர்ப் பார்வைக்கு வைத்து விட்டு, அதில் நன்றிக் குறிப்பையும் சேர்த்துத் தபால் கட்டில் சேர்த்து விடவும் கருதினன் வீரமணி. - -

மன உளைச்சலுக்கு மருந்து தேவை.

புத்தக அலமாரி சுழன்றது. .

வெள்ளிக் கிழமை, சக்கரவர்த்தித்திரு மகன்’, ‘ஆரிய மாயை', 'பாரதியார் பாடல்கள்', ஒதெல்லோ', 'பயிர்ப் பாதுகாப்பு','சமுதாயம் ஒரு சைபைஜார்', 'குடியரசு", உயர்ந்த எண்ணங்கள், 'அலை ஓசை', -இப்படி நூல்கள் ஊடும் பாவுமாக ஓடின.