பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

1 5

தேநீர்க் கடை உரிமையாளருக்கு வாயெல்லாம் பல் ஆயிற்று. ஏம்ப்பா மாஸ்டர்! கோப்பின்ன காப்பின்னு அர்த்தம். சாம்பான் அக்கரைச் சீமை, ஆசாமி. அதுதான் பழைய மண்வாசனை வீசுதாக் கும்!’ என்ருர்.

வீரமணி தனக்குத் தானே நலியாமல் சிரித்துக் கொண்டான். மறு விடிை, அந்தச் சிரிப்பு மாறத் தொடங்கியது. பொசுக்கும் வெயிலிலே பொசுங்கி ஒதுங்கி நின்ற அந்த மனிதனை அனுதாபம் பொங் கப்பார்த்த அவன் கண்கள் பொங்கின. இருக்கையி னின்றும் மெல்ல எழுந்தான். மனிதாபிமானம் சிறக்க, சாம்பான், உள்ளே வந்து பெஞ்சியிலே குந்தி கோப்பி சாப்பிடுங்க. அதோ பாருங்க; உங்களை வரவேற்க ஒரு மகாத்மா பொக்கை வாய்ச் சிரிப் போடே காத்துக்கிட்டிருக்கார்,” என்று அவன் கூறினன்.

'ஊம், வாப்பா உள்ளே,' என்று அனுமதி: கொடுத்தார் தேநீர்க் கடைக்கு உடையவரான ஞானசீலன். சாமர்த்தியசாலிதான்!-இப்போது தான் அவருடைய நெற்றியை ஒற்றி விளங்கிய திரு. நீற்றுப்பட்டைகளுக்கு யதார்த்தமானமகிமையோ, தார்மிகமான அர்த்தமோ கிடைத்தது போலும்!

அமரப் புன்னகையோடு வரவேற்ற மகாத். மாவைச் செய்ந்நன்றியோடு பார்த்துக் கொண்டே உள்ளே பிரவேசித்தான் சாம்பான்.

இருட்டறையிலே வெளிச்சம் பரவினுற். போன்று, ஆரோக்கியமான சூழ்நிலை உருவாயிற்று.