பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173

17.3

உங்க காளேயை அநியாயமாகவா கட்டிப்போட் டிருக்கோம்?... உங்க வாய்க்குக் கூட நியாயம் படிக்கத் தெரியுதே? பாவம், வாயில்லாச் சீவனச் சேன்னு இந்த மாட்டுக்கும் மாப்பு விட்டுப்புட்டு அதைக் காலிலே கட்டிப் போட்டதோட நிறுத்திக் கிட்டோம்! ஆமா!' என்று முழக்கம் செய்தான் அவன். சுருள் முடிகள், மயங்கிக் கொண்டிருந்த அந்திக் கதிரொளியில் அந்தம் சேர்த்துக் கொண் டிருந்தன. -

ராமையாத் தேவரின் தேள் கொடுக்கு மீசை தொங்கியது தொங்கியதுதான் போலும்! ஒரு நாட்டு நடப்புக்காகிலும் ஒரு தரம்- ஒரேயொரு தரம் முறுக்கேறித் துடித்துக் காட்டித் தொலைக்கக் கூடாதோ?-ஊம்!-மூச்... என்னுேட காளையை உங்க வீட்டுக் கல்லுக் காலிலே கட்டிப் போட்ட தோட நிற்காட்டி, அந்த வாயில்லாத சீவனே என்னு செஞ்சிருப்பீங்களாம்?......' என்று சூதுமதி தழலாகக் கொதிக்க வினவினர் புதுப் பணக்காரர் ராமையாத் தேவர். இடுப்பு வேட்டியை வசம் கணித்துக் கட்டிக் கொண்டிருந்தார்.

"எங்க வீட்டு வைக்கலை அநியாயமாய் உங்க காளை தின்ன குற்றத்துக்கு உண்டான தண்டனையை அது அனுபவிக்கும்படி செஞ்சிருப்போம். பாவம், வாயில்லாப் பிராணியாச்சேன்னு பொறுத்துக் கிட்டோம். வாய் பேசத் தெரியாத அந்தச் சீவன் செஞ்ச தப்புக்கு பதில் சொல்லாமல் நீங்க தப்பிக்கஎங்ககிட்டேயிருந்து தப்பிக்க இனி உங்களாலே ஏலவே ஏலாதாக்கும். நெஞ்சிலே முடிச்சுப்போட்டுக்