பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

# 7 :

கிடுங்க!' எச்சரிக்கை சிவப்புக்கொடியாக ஆடியது. தலையை நிமிர்த்தினுன் வீரமணி.

"அப்பனுக்கும் மகனுக்கும் வாய்ச் சவடாலுக்கு மட்டும் குறைச்சல் கிடையாது! சரி, சரி. உங்க கிட்டே எனக்கு என்னு பேச்சு வேண்டிக் கிடக்குது? என்னுேட தலையை இத்தனை தாளும் வாங்கிறதுக்கு உங்களுக்குத் துப்பு இல்லையாம், இப்ப கொக்கரிக் கிறியே, வீரமணி?...ஆமா, என் வெள்ளைக் கான உங்களோட வைக்கோலைத் தின்னது என்கிறதுக்குச் சாட்சி என்னவாம்? ஊம், பட்டுன்னு சொல்லு:

இப்போதுதான் ராமையாத் தேவருக்குத் தன்னுடைய அருமை பெருமையான தேள் கொடுக்கு மீசையின் நினைவு சிவிர்த்தெழுந்திருக்க வேண்டும்! ... .

'டே ராமையா! நீ இப்பிடிச் சாட்சி சாடிக்கை கேட்பாய்னு எனக்குத் தெரியாதாடா? சாட்சி சம்பந்தமெல்லாம் பொழுது விடிஞ்சடியும் தெரியும் உன் புத்திக்கு!...நீ நல்லபடியாய் உயிர் பிழைக் கோணும்ன, இப்பவே இந்த மினிட்டிலேயே என் மண்ணை-என்ைேட சொந்த மண்ணை விட்டுப்புட்டு அப்பாலே நகர்ந்துக்கிட்டு ஒடுடாலே!...உனக்குத் தெரியாத தாணுவா? ஓடிவிழுந்து, புகார் பண்ணு வேடா? ஊம், ஒடுடாலே!...”

வினையறுக்கும் சொற்களாகவே வெடித்துச் சிதறின சொற்கள். பெரியவரின் ஆருத கோபம் இன்னமும் அடங்கின பாடில்லை.