பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

፱ 7 ፩

நெஞ்சைப் பறிப்பது போலே புன்னகை செய்து கொண்டிருந்தன.வீரமணியின் இதயத்தின் இதயம் விம்மி வெடிக்கத் தொடங்கியது. அந்த வைரச் சிமிக்கிகள் இரண்டும் அப்பொழுது அவனது செவி களிலே "அன்னம்! ... அன்னம்!’ என்று கூப்பாடு போட்டுக் கொண்டேயிருந்தன. ஏக்கமும் தவிப்பும் மூண்டெழ அவன் கால்களை எட்டிப்போட்டான். சோள முறுக்குகளைக் கண்ட மாத்திரத்தில் லாவி' எடுக்கும் பாலகனைப் போன்று, அவன் அவ்விரு வைரச் சிமிக்கிகளையும் அள்ளியெடுத்து அடிமடியில்

விசையோடு செருகிக் கொண்டான். அவன் நெஞ்சம் ஏனே தறிகெட்டுச் சுழல ஆரம்பித்தது.

மறுகணம்: 'தம்பி வீரமணி!' என்று மிடுக்கான

குரலெடுத்துக் கடுமையான சுருதியில் அலட்டிக் கொண்டே அவனுக்குப் பக்கத்திலே அவனுடைய அருமை அப்பா ஆதிமூலத் தேவர் வந்துநின்ருர்!

11. வசந்தக் கனவுகள்

அந்தி மயங்கிய வேளை அது. அந்த வைரச் சிமிக்கிகள் இரண்டையும் அடி மடியில் செருகிக் கொண்ட வேளையில், வீரமணி யின் மனமும் தான் மயங்கிப் போயிருந்தது. அம் மயக்கத்தில், இனம் புரியதாத பதட்டமும், இனம் புரிந்த துயரமும் தறிகெட்டுச் சுழன்ருலும்கூட அவ்வுணர்வுகளின் விசித்திரக் கலவையினுாடே