பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

| 6

வீரமணி.ஆறுதலடைந்தான். புதுப்பிக்கப்பட்ட தெம்போடு காப்பியைச் சுவைத்துப் பருகிக் கொண் டிருந்த சாம்பானைப் பார்த்தபோது, அவனுக்கு எவ்வளவோ நிம்மதியாக இருந்தது. -

சுவர்க் கடிகாரம் எட்டு முறை குரல் கொடுத்தது. -

கோப்பையை எச்சரிக்கையுடன் சிமிட்டித் தட்டில் வைத்துவிட்டு, அவசரம் அவசரமாகத் தோல்பையைப் பிரித்தான் வீரமணி. ஊதா நிற நாட் குறிப்புப் பிரிந்து விழவே, அதைப் பதட்டத் தோடு எடுத்தான். - х

உலைப் பானையில் மகிழ்ந்து கொட்டுமே சோற்றுப் பருக்கைகள், அந்தப் பாவனையில், அன்பின் தொடர்பு கொண்ட கடிதங்கள் பலவும், நீதி மன்றத்தின் தொடர்பு சேர்த்த தீர்ப்புத் தாள்கள் சிலவும் சிதறின.

வீரமணி சிந்தன வசப்பட்டான். இதயம் பந்தயத்திடலாக மாறும் பொழுது, நினைவுகள் பந்தியக் குதிரைகளாக மாறுவது இயல்புதான். கடிதங்களைக் கண்டதும், அவன் அண்ணுமலை நகருக் கும் சென்னைக்குமாகப் பறந்தான். நீதிமன்றத் திர்ப்புத் தாள்களைப் பார்த்ததும், அவன் ஆவணத் தாங்கோட்டைக்குத் திரும்ப வேண்டியவன் ஆன்ை.

அவனுடைய நெஞ்சத்தின் பகைமை மறக்காத தினைவிலே 'மாமன் வேம்பாகக் கசக்க, நேசம் மறக்காத நினைவிலே 'மாமன் மகள் செங்கரும்பாக