பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179

| 79

சிரிப்பின் படம் அவனுடைய நெஞ்சில் படமெடுத் தது, மீண்டும். ஆகவே, அதே அச்சில் அவனும் அப்பா மாதிரி ஒரு சிரிப்பைச் சிரித்து வைத்தான். பற்கள் முப்பத்திரண்டையும் மறைத்துக் கொண்டு சிரித்த சிரிப்பு அது. போவித் தனமான சிரிப்பாகவே அமைய வேண்டுமென்று பாடுபட்டுச் சிரித்த சிரிப்பு அது. அப்படிச் சிரித்ததில் இயற்கையாகவே அவனுக்கு ஏனே ஒர் ஆறுதல்கூட கனிந்திடவே செய்தது. இவ்வுணர்வின் சுழிப்பு அவனுள் படர்ந்த போது, அவனுடைய மன அந்தரங்கம் அவனைக் கண்டு கைக் கொட்டிச் சிரிக்கவும் தவறவில்லை. "அப்பா மட்டும் என்ைேட மனசைப் படிச்சுக் கிட்டு இருந்தும், என் அம்மான் மகள் அன்னத்திடமிருந்து என்னை மடை மாற்றத் துணியலாமா, என்ன?" என்ற கேள்வியின் நியாயத்தை அவனது மனச் சான்று எங்ங்ணம் புறக்கணிக்க முடியும்?

பெரியவர் சில கணப் பொழுது வரை செயலற்று நின்று விட்டார். வீரமணியின் பொடி துாவிய பேச்சின் உள் அர்த்தம் அவருக்குப் பிடிபடா மல் இருந்திருக்காது! காசு பணத்தோட அருமை பெருமை உங்க மாதிரியே எனக்கும் புரியாதுங் களா?' என்று வீரமணி வாழைப் பழத்தில் ஏற்றிய ஊசியாகச் சொற்களைக் கொட்டிக் குத்திக்காட்டிய அந்தந் பேச்சு தேவரைச் சிந்திக்க வைத்ததோ? இல்லை, வேக வைத்ததோ? -

சுயப்பிரக்கினையை மீட்டுக் கொண்டதும், "ஆமா ஆமா...என்னுேட அருமை மகனுக்கு என்வை மாதிரியே காசு பணத்தோட அருமை