பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181

I & I

யாண்டான்தானுங்களே, அப்பா?' என்று கேட் டான் வீரமணி.

'ஒகோ, அப்படிப் பிடிச்சிட்டியா நூலை?... அதுவும் சரிதான். இந்த ஆதி மூலத்தேவர் போட்டு வச்ச புள்ளி எப்பத்தான் தடம் மாறிச்சு? சரி, சரி; நீ போ. உன்னுேட அருமை அம்மான் வீட்டுக் காளைக்கு நான் காவல் இருப்பேனுக்கும். அதைப் பற்றி லவலேசமும் கிலேசப்படாமல், நீ நட. அன்னம் தான் ரோசம் தாங்காமல் இந்நேரம் தவிச்சுக்கிட்டுக் கிடக்கும்! இல்லையா, தம்பி?' என்ருர் அவர், சுருதி ஓங்கிய குரல்தான்! -

"அதையெல்லாம் நான் எ ன் ன த் ைதக் கண்டேன், அப்பா!'- வீரமணியின் பேச்சு சுருதி இறங்கி ஒலித்தது. -

"அதுவும் சரிதான்!” பெரியவரின் பார்வை அந்த வெள்ளை'யின் மீது திரும்பியது.

சமையல் காசியின் புண்ணியத்தினால், வீடு ஒளி ஏற்றித் திகழத் தொடங்கியது. :

வீரமணி திரும்பிப் பார்த்தான். இருட்டிலி. ருந்து வெளிச்சத்திற்கு வந்து விட்டதாகவே அவன் மகிழ்ந்தான். ஆனல் வீட்டின் வெளியழகுக்குத் திருட்டி கழிப்பது போன்று வீட்டின் உள் அழகு அசடு கட்டி வழிந்தைக் கண்டதும், அவனது மகிழ்ச்சி, சொல்லாமல் கொள்ளாமல் தேசாந்

கா. நி-14