பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

J & 2

திரம் புறப்பட்டுப் போயிற்று. "அப்பா!' என்று கொடூரக் குரலெடுத்துக் கூவினன் வீரமணி.

திடுக்கிட்டுத் திரும்பலானுர் ஆதிமூலத் தேவர். தவப்புலவன், தவம் கலந்த மாதிரி கூப்பிட்ட அந்தக் குரலின் துடிப்பை எப்படி மனத்தில் வாங்கிக் கொண்டாரோ, தெரியவில்லை. அவரையும் மீறின அச்சத்தோடு திசை திரும்பலானர் அவர். 'என் னடா ராஜா?’ என்று விசாரித்தார்.

"நாளுவது, ராஜாவாவது? ராஜாக்கள் பரிபாலனம் செஞ்ச காலமெல்லாம்தான் அப்பவே மலேயேறிப் போயிட்டுதே, அப்பா?...நான் ராஜா இல்லீங்க, வீரமணி நான்...!" என்று சொல்விக் கொண்டு, தன் தந்தையின் முகத்தைப் பார்க்க வசதியாக அவர் முன்னே வந்து நின்ருன் வீரமணி. உண்டாக்கிக் கொண்ட வா ய் ப் பு க் கு ஒர் உத்வேத்தை உண்டாக்க அவன் தன் தந்தையைக் கொடுமையான ஆத்திரத்தோடு பார்த்தான்; சீரழிந்த துன்பத்தோடு பார்வையிட்டான் !

பெற்ற மகனின் வசந்தக் கனவுகளை யெல்லாம் மண்ணுேடு மண்ணுக அழித்து மிதிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருந்த அப்பா அவர்; பெற்ற தந்தை அவர். தாய்க்குத் தாயாகவும் தந்தைக் குத் தந்தையாகவும் அமைந்தும் அமர்ந்தும், கறிவேப் பிலைக் கொழுந்து போன்ற தன் குலக்கொழுந்தை வளர்த்து ஆளாக்கியவர் அவர். அவருக்குத் தன் அருமைத் திருமகனின் ஆத்திரத்தைச் சந்தித்த போது, கண்ணிர் மடைதிறந்த வெள்ளமாகப்