பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

翼8盛

வேண்டும். பணம் இருந்துவிட்டால், பெருமை தன்னல் வரும் வீரமணியின் இத்தகைய பொருளா தாரக் கொள்கைகளுக்கு ஆதிமூலத்தேவரால் ஈடு. கொடுக்க இயலாமற் போய் விட்டது. தென் புறத் தாழ்வாரத்தில் இருந்த குதிர்களிலே நெல்லையும், உட்புறத்தாய் வீட்டில் இருந்த மாந்தளை தேக்குப் பெட்டகத்தில் பணங்களையும் கொட்டி அளந்து குவித்து வைத்திருந்தவர்தான் பெரியவர். ஆனல், தற்போது காலம் மாறி விட்டது. எல்லாம், ஆண்டுமாறி விட்டது. புதுப் பணக்காரர்களுக்கு மத்தியிலே, பழைய பணக்காரர்களால் தலை நிமிர்ந்து கால் ஊன்றி நிற்க முடியவில்லை. ஆகவே, இந்நிலைக்கு தேவர் மட்டிலும் எங்ங்ணம் விதிவிலங்கு ஆகக்கூடும்? - -

செயற்கை ஒளி சரம் கட்டிப் பரவியது.

'தம்பி, ' என்று பரிவுடன் கூப்பிட்டார் ஆதிமூலம். சோகத்தின் பயங்கரமான மெல்லிய இழைகள் இப்போது அவரது முகத்தில் தடம் காட்ட வில்லை. "வீரமணி, என்னமோ சொல்ல. வாயை எடுத்தாய்; சொல்ல வந்ததை- அல்லது சொல்லவேண்டியதைச் சொல்லாமல் அப்படியே மருள் கொண்டாப்பிலே நின்னிட்டியேப்பா?" என்று வினவினர் அவர். -

வீரமணி பெருமூச்சு விட்டான். அவன் செவி களிலே மறுபடியும் அந்த வெள்ளைக் காளை மாட்டின் அபய ஒலம் கேட்க ஆரம்பித்து விட்டது. அவனுடைய மாபிைமானம்' சிலிர்ப்படைந்தது.