பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

187

புறக்குடிப் பயல் ராமையத் தேவனேட வெள்ளேக் காளை பாவத்துக்கு உண்டான கூலியை அனுபவிக் கிறதாட்டம் நம்ப கிட்டே வந்து சரண் அடைஞ்சி ருக்குது. வலியத் தேடி வந்திருக்கிற இந்த அயனை, ஒண்ணும் நம்பர் சந்தர்ப்பத்தை எப்படி எப்படி யெல்லாமோ உபயோகப்படுத்திக்கிட்டு, இந்த வெள்ளைக் காளையின் மூலமாக உன் அருமை அம்மான் ராவையாவுக்குப் புத்தி படிச்சுக் கொடுக்க வேணும்னு ரோசனை பண்ணி வச்சிருக்கேன். நீ என்னடான்ன, வெண்ணெய் திரண்டு வாரப்ப தாழியைப் போட்டு உடைச்சு நொறுக்கிற மாதிரி, இருந்திருந்து ஒரு வாயில்லாச் சீவனுக்காகப் பரிஞ் சுக்கிட்டு இரக்கப்பட்டு அதுக்குத் தீணி வீசுறதுக்குத் துடிச்சுக்கிட்டு இருக்கியேப்பா?..."

பயம் ஊட்டும் ரீதியிலே, நயம் சொட்டச் சொற்களை வாரி வழங்கிய வண்ணம், ஆதிமூலத் தேவர் தொழுவத்தை நெருங்குவதற்கும், கையிலி ருந்த வைக்கோலை அந்த வெள்ளைக்காளைக்கு முன்னே வீரமணி இதமும் பதமுமாக வீசுவதற்கும் கனகச்சிதமாகத்தான் இருந்தது.

ஆல்ை...?

காய்ந்த மாடு கம்பிலே விழுந்தது என்பார்கள் அல்லவா?-அந்தப் பாவனையில் வைக்கோல் பிசிறு களைக் கண்டதும், வெள்ளைக் காளை ஒரே தாவாகத் தாவி, கொம்புகளைச் சிலுப்பி, வாலை உலு கிக்கியபடி நாக்கை நீட்டியது. ஆனல் பாவம், ஒரு பிரி’ மட்டும் தான் அதன் வாய்க்கு எட்டியது. காலுக்கு எட்டிய