பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

I 7

இனிக்க இப்படிப்பட்டதொரு முரண்பட்ட நில வரத்தில் மனம் ஊசலாட, சிதறியவை அனைத்தை, யும் கருக்கடையாக ஒழுங்கு சேர்த்துப் பைக்குள்ளே திணித்த பின், பையின் மறுபக்கத்தைத் திருப்பி, ஐந்து ரூபாய் நோட்டொன்றைத்தேடி எடுத்தான்.

கல்லாவை இலக்காக்கி நடந்தான்.

"ஐயா, மொத்தம் ஏழு சாயாவுக்குத் துட்டு எடுத்துக் கிட்டுப் பாக்கியைத் தாங்க,’’ என்று வீரமணி கேட்டுக் கொண்டான். அவனது சகாக் கள், 'நான் முந்தி-நீ முந்தி' என்று தலைக்கொரு பத்து ரூபாய்த்தாளை நீட்டி அன்புக்குப் போட்டி போட்டதை உணர்ந்த அவன், அவர்கள் அனைவரை யும் அதே அன்பால் வெல்லவும் செய்தான். 'என் ளுேட வெற்றிக் களிப்பிலே பங்கு கொண்டவங்க நீங்க; ஒரு சில புல்லுருவிகளைப் போல நம்பிக்கை மோசம் பண்ண ஒப்பாதவங்க. என் பேரிலே, உயிரையே வச்சிக்கிட்டு இருக்கிறவங்க. அதேைல என்ைேட அன்பிலேயும் நீங்க பங்கு கொள்ள வேண்டியது தான் நியாயம்! ... அப்பத்தான் வள்ளுவப் பெருமானுேட நன்றி அதிகார'த்துக்கு, நம்ப மூலமும் ஒரு நியாயம் கிடைக்க இயலும்,' என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசினன். வீரமணி. மீதிப்பணத்தைக் கணக்கிட்டுப் போட்டு கொண் டான்.

நண்பர்கள் உடல் புல்லரிக்க, உள்ளம் சிலிர்க்க நின்ருர்கள்.