பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189

189

பூத் நெருப்பாக பரஸ்பரம் ஒரு வன்ம உணர்ச்சிபகை உணர்ச்சிமுட்டி மோதி வெடிக்க வேளை பார்த்துக்கிட்டு இருக்கையிலே, உங்க ரெண்டு பேருக்குமே அப்பாற் பட்ட ஒரு காளையின் விசாரத்தை ஏதுக்கு நாம விலை கொடுத்து வாங்க முனைய வேணும்?!” என்றுவேகம் வடிந்த குரலெடுத்துக் கேட்கலானன் இளவட்டம்:

'தம்பி, நீ சொல்லாமலேயே நியாயம் எது' அநியாயம் எது என்கிற சங்கதியெல்லாம் எனக்குத் தீரத் தெளியப் புரியும். சீட்டாட்டத்தைப் பற்றி உனக்கு ஒண்ணும் தெரியாதிண்ணு தான் நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். ஒரு வேளை, தெரிஞ்சிருந் தாலும் தெரிஞ்சிருக்கலாம் சீட்டு ஆட்டம் போடு றப்ப, துருப்புச் சீட்டு கைக்குக் கிடைச்சிட்டா, அதை யாரும் வெளியே விட்டுப் புடமாட்டாங்க எதிரி தோற்றுப் பூடுவானே அப்படின்னு தர்மம் பார்த்தால், அப்பாலே, அந்த துருப்புச் சீட்டை வச் சிருக்கக் கூடிய பேர்வழியே மண்ணைத்தான் கவ்வ வேண்டிவரும். அதை ஒத்துத் தான் இந்தக் காளைக் கதையும்!... ஆயிரம் வந்தாலும் சரி, ஆயிரம் போனலும் சரி; குழி பறிச்சுத் தான் குழி முயலைப் பிடிப்பாங்களாம். நானும் உன் அருமை அம்மானே அவனுக்குச் சொந்தமான இந்த வெள்ளையைப் பக டையாக வச்சுத் தான் ஒரு கை பார்க்கப் போறேன்! குன்னக்குடிக்குக் காவடி எடுத்தாலும், ராமையா இனி அவைேட காளையை என்கிட்டேயிருந்து மீட்டுக்கிடவே ஏலாதாக்கும்! ராத்திரி முச்சூடும் மாட்டுக்காரப் பயலோடே சேர்ந்து நான்