பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

| 93

கண்ணிலே விளக்கெண்ணெய் ஊற்றிக்கிட்டுத் தான் விடிய விடிய கண் விழிச்சிருக்கப் போறேன்!. தலைமுறை தத்துவமாய் ஊர் நாட்டாண்மைக்கு அதிகாரம் கொண்ட இந்த ஆதிமூலத்தை சந்திக்கு இழுக்கிறதுக்கு மனப்பால் குடிச்சுக் கிட்டு இருக்கிற உன் அம்மான் ராமையாவுக்கு ஈரலிலே பித்தா, இல்லை, எலும்பிலே பித்தான்னு சோதிச்சுப் பிட வேணுமா?... ஊம், சொல்லு தம்பி, சொல்லு!' பெரியவருக்கு மூப்பு வந்து விட்டது. ஆகவே மூச்சு வாங்கியதில் வியப்பு ஏதுமில்லை.

'நான் சொல்றது இருக்கட்டும் ஒரு முடுக்கிலே. இப்ப நீங்க சொல்லுங்கப்பா! உ ங் க ளு க் கு. உண்டான மான ரோசம் இம்மாம் தொலைவுக்கு விழிச்சுக்கிட்டு இருக்கிறதைப் பார்த்தால், நாளேக்குப் பொழுது விடிஞ்சதும் விடியாததுமாய், அம்மான் கிட்டே போய், நீ ங் க அம்மானுக்கும் பட்டிருக்கிற கடன் பூராத்தையும் கட்டிப்பிடுவீங் கன்னு தோணுதுங்களே? என் யூகம் சரிதானுங் களா? அப்படி நீங்க கடனைத் தீர்த்தால்தான், அம்மானுேட இந்தக் காளேயைப் பகடையாக்கி நீங்க சொக்கட்டான் விளையாடுறதுக்கு ஒரு நியாய மான அர்த்தம் இருக்க வாய்க்கும்! இல்லிங்களா, அப்பா?- சொல்லுங்கப்பா, சொல்லுங்க!...”*

வீரமணியின் தர்க்க வாதம் நல்ல பாம்பைச் சீண்டி விட்ட கதையாகவே ஆயிற்று. பெரியவரின் இடுக்கு விழுந்திருந்த கண்கள் இரண்டுமே மிளகாய்ப் பழங்களாகச் சிவந்து விட்டன. அந்தச்