பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

12. சலனத்தின் உணர்வுகள்

சிங்கப்பூர்ச்சீமான் ராமையாத் தேவர், டேய் ராமையா!' என்று ஊர் நாட்டாண்மை ஆதி மூலத் தேவர் ஆத்திரம் தூள் பறக்க, அதிகாரம் கொடி பறக்க, அலட்டிய குரலைக் கேட்டதுதான் தாம5ம்; உடனே, அவர் சிம்ம அவதாரம் எடுக்க ஆரம்பித்து விட்டார். தன்னுடைய துடிப்பைப் பிரதிபலிப்பது போலத் துடித்திட்ட தேள் கொடுக்கு மீசையைத் தட்டி விட்டுத் தட்டிக் கொடுத்தவாறு, விழிகளை வெட்டிக் கட்டி நிமிர்த்தினர்: "ஒய், ஆதி மூலத் தேவரே! என்னமோ உங்க வீட்டு மாட்டுக் காரப் பயலை ஏவுறதாட்டம், டேய் ராமையா' அப்படின்னு கூப்பாடு போடு lங்களே?-என்ன நெஞ்சுத் தைரியம் இருக்க வேணும் உமக்கு?” என்று ஓங்காரமாக மட்டுமல்லாமல், ஒய்யாரமாக வும் கேட்டார் அவர்.

ஆதிமூலத் தேவர் பெரியவர்; ஆகவே, அவர் பெரிதாகவே சிரித்தார். எ தி ர் த் து வந்த ஆத்திரத்தை மடக்கிவிட, சிரிப்பைத் தேளாகக் கொட்டி எதிரியை மடக்கிப் போட வேண்டுமென் பது அவருடைய சித்தாந்தமாக இருக்கலாம். அக் கரைச் சீமைப் புதுப் பணக்காரரான ராமையாத் தேவரை ஏறிட்டுப் பார்த்தார். "துப்புக் கெட்ட மச்சானுக்கு மீசை துடிக்கக் காணுேம்; ஆத்திரம் தான் துடிக்குது. நேற்று வெடிச்ச இலை நீ; உன்னை 'டேய், ராமையா'ன்னு அடாவடியாய் அழைக்கிற