பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195

95

யது. ஆதிமூலத் தேவர் ஓர் அகம்பாவம் இழை யோட கைகளை விரித்துக் காட்டினர்.

ராமையாத் தேவரின் ஆத்திரம் அவருடைய பற்களிலே நசுங்கிக் கொண்டேயிருந்தது. "வீரமணி மாப்பிள்ளை, என்னுேட வைரச் சி மிக்கிகள் உங்க கண்ணி லேயாச் சும் தென்பட்டுச் சா?... உங்க அம்மான் மகளுக்காக இன்றைக்கு அந்திக் கட்டிலே தான் செஞ்சு வாங்கினேனுங்க!' என்று கேட்டார் ராமையா,

வீரமணிக்கு ஒர் அரைக் கணம் ரத்த ஒட்டமே நின்று விட்ட மாதிரி ஆகிவிட்டது. அரை நாழிப் பொழுதுக்கு முந்தி, பொட்டலிலே கண்ட விளாம் பழமாகக் கண்டெடுத்த அன்னக் கொடியின் வைரக் சிமிக்கிகளைப் பற்றின நடப்பு நிலவரத்தை அப்பா விடம் மறைத்து விட்ட நிலையிலே, உண்மையை இப்போது எவ்வாறு தாய் மாமனிடம் வெளிக் காட்ட முடியும் என்ற சிக்கல் அவனைப் பிடரியைப் பற்றி இழுத்து அலேக்கழித்துக் கொண்டிருந்தது. தவிர்க்க வாய்க்காத சங்கடமும் தவிப்பும் அவனைச் சோதிக்கத் தப்பிவிடவில்லை. பேயறைபட்ட பாவனை யில் சில இமைப் பொழுதிற்கு இமைக்கவும் மறந்து, செயலற்று-செய்வகை இழந்து அப்படியே குத்துக் கல்' லாகவே நின்று விட்டான் வீரமணி.

ஆதிமூலம் தன் அருமை மைந்தனையும் மைத் துனன் ராமையாவையும் மாறி மாறி, மாற்றி மாற்றிப், பார்வையிட்டார். எதையோ எண்ண முயன்று, அல்லது எண்ணி, அவ்வெண்ணத்தில்