பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

196

பொட்டுப் பொழுது வரை மயங்கி அல்லது மயங்க முயன்று, பிறகு விடுதலை கொண்ட அவர் நெற்றி யைத் தடவி விட்டவராக ராமையாவை நோக்கி ஞர். "இந்தாப் பாரு, ராமையா! தும்பை விட்டுப் புட்டு வாலைப் பிடிக்கிற துக்கு உனக்கு இருக்கக் கூடிய சூழ்நிலை அனுசரணையாக இருக்கலாம். அதைப் பற்றிக் கிண்டிக் கிளற வேண்டிய அக்கறை எனக்குக் கிடையாது. நீ எங்கேயோ புத்திகெட்டு வைரச் சிமிக்கிகளைக் கெட்டுப் போக்கிட்ட தப்புக்கு எங்களை ஏன் குடைஞ்செடுக்கிறே?......நீ காணும லடிச்ச சிமிக்கிகள் வைரமா, இல்லையா?-அல்லது, அதுக ரெண்டும் உன் அன்பு மகள் அன்னத் தினுடையதா, இல்லே, வேறே யாருக்கும் அதுக ரெண்டும் சொந்த பந்தம் கொண்டதா என்கிற தலைவலிச் சங்கதியெல்லாம் எங்களுக்கென்ன தெரியும்?” என்றர் அவர். இன்னும் கூடுதலாக வேறு ஏதேதோ பேசத் துடித்து, பிறகு அத்துடிப் பைக் கட்டுப்படுத்திக் கொண்டவர் போல அவர் காணப்பட்டார்.

அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக் கிருன் என்பதை உணர்த்திக் காட்ட முனைபவன் மாதிரி, அப்பாவின் பேச்சை அனுசரித்து ஒப்புக் கொண்டவனுக, காணுமற் போன வைரச் சிமிக்கி களைப் பற்றி எனக்கும் யாதொன்றும் தெரியாது! என்கிற மாதிரி, அவனும் எதிர் மறையில் பலமா கத் தலையை உலுக்கி ஆட்டினன்.

ராமையாத் தேவரின் முகம் ஏமாற்றத்தால் மாறி விட்டது; தந்தையையும் தனயனேயும் சூட்சு