பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197

I 97

மத்தோடு பார்வையிட்டார். தன்னுடைய அடி மடியை இதம் பதமாகத் தடவிப் பார்த்தபடி, ‘மான ஈனத்துக்கு அஞ்சாத புறக்குடிப் பயல் எவனே ஒருத்தனேட கையிலே என் மகளோட் வைரச் சிமிக்கிகள் ரெண்டும் அகப்பட்டு இருக்க வேணும். என்னுேட அருமைத் தங்கம்-ஆசைப் பொண்ணு அன்னத்துக்காகச் செஞ்ச அந்த வைரச் சிமிக்கிகளை எடுத்த புறம்போக்குப் பயல் மெய்யா லுமே உப்புப் போட்டு சோறு உண்ணவனக இருந் திருந்தால், இப்பவே என் வீட்டிலே காதும் காதும் வச்சாப்பிலே கொண்டாந்து போட்டுப்புடுவான்! ஒரு வேளை, அந்தச் சிமிக்கிகளைப் போடாமல், ‘அழுச்சாட்டியம்' பண்ணினால், அந்தக் களவாணிப் பயலை சும்மா விடப் போறதில்லை!' என்று காரசார மாகவும் கோபாவேசமாகவும் பேசி நிறுத்தினர் அவர். மிளகாய்ப் பழங்களாகச் சிவந்திருந்த ராமையாத் தேவரின் கண்கள் மேலும் சிவந்து விட்டன. x . "

தாய் மாமன் சூடு பறக்க-அனல் தெறிக்கப் பேசிய பேச்சைக் கேட்டதும் வீரமணிக்குச் சுருக் கென்றது. ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு நெருஞ்சி முள்ளாகத் தைத்து விட்ட வேதனையை அவனுடைய மன அந்தரங்கம் உணர்ந்ததும், அவனது உள்ளம் குற்ற உணர்வின் கசையடி தாளர் மல் திணறியது. திண்டாடியது. அன்னக்கொடிக் காகச் செய்திருந்த வைரச் சிமிக்கிகள் வனவாசம் செய்திருந்த அடிமடியை நவியாமல் தொட்டுப் பார்த்த அவனுடைய விரல்களில் அம்மான் மகள்.

கா. நி-13