பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

1 98

அன்னத்தைத் தீண்டுகின்ற தொட்டுணர்வு அவனை ஓர் அரைக் கணம் மெய்ம்மறக்கச் செய்தது. உள்ளம் தொட்டவள் அவள்; உணர்வுகளைத் தொட வைத்தவளும் அவளே!-கனவின் தொடு வானமாக விளங்க வேண்டும் என்பதற்காகத்தான் அவளை அவன் இதயத்தினின்றும் பிரித்துவிட கங்ங்ணம் கட்டி விட்டாரா அப்பா? அப்பாவை எண்ணும்போது, விதி என்று ஒன்று இருக்கவே வேண்டுமென்று நம்பத்தான் வேண்டும்போலும்! 'அன்னம், என்னை மன்னிச்சிடு! நான் திருடன்தான் ! ஏன், தெரியுமா?-உன் நெஞ்சைத் திருடிக்கிட் டேன் அல்லவா? ஆல்ை, உனக்குப் பாத்தியதை கொண்ட வைரச் சிமிக்கிகளை நான் திருடவே கிடையாது. தேடி வந்த சீதேவியாக அவை என்னைச் சரண் அடைஞ்சதுக்கு அப்பாலே, அதுகளை ஒதுக்கி விலக்குவேன?... நெஞ்சில் காதலாக நிறைந்தவள், கண்களிலே கண்ணிராகவும் நிறைந்தாள்! அரிச்சந் திரத்தனமாக இந்த வைர்ச் சிமிக்கிகளை அம்மா னிடம் இப்போது கொடுத்து விட்டால் அப்புறம் அப்பா என்னைத்தவருக நினைச்சுக்கிடுவாங்க!' என்ற எண்ணத்தின் பலவீனமான அமைதியில் அவன் உழன்ருன்; சுழன்ருன். ஆயினும் எதையும் தாங்கும் இதயத்தின் கண்களிலே நேர்மையின் புனிதம் பளிச்சிட்டது!

ராமையா ஏமாற்றத்தின் எடுபிடியாகி அங் கிருந்து நகர்ந்த நேரத்திலே, அவருடைய வெள்ளைக் காளை முன் மாதிரி மறுபடி அவலக் குரல் எழுப்பி