பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201

20 I

தவித்துக் கொண்டிருந்த உண்மையை அவர்கள் இருவருமே உணர்ந்திடவில்லை! -

இப்போது வீரமணி தன்னந் தனியாக இருந் தான். அவனுக்குத் தனிமை வேண்டியிருந்தது. தன்னைப் பற்றிய சுயப் பரிசோதனையில் தன்னை ஈடுபடுத்தி, அதிணின்றும் விளையும் நல்லதும் கெட்டதுமான ஆரம்பத்தின் முடிவுகளை அல்லது, முடிவின் ஆரம்பங்களை அலசி ஆராய்ந்து, அதன் மூலம் தன்னுடைய எதிர்காலத்துக்கு ஒரு திட்டம் வகுத்துக் கொள்ள முடியாதா என்றும் வகுத்துக் காட்ட இயலாதா என்றும் அவ நம்பிக்கையோடு கூடிய ஒரு நம்பிக்கையின் நிழலில் ஒண்டிக் கிடந் தான் அவன். நிலவின் அருமைைையப் படித்துச் சொல்ல நிழலுக்கு வாய்ப்பு ஏது? என்ருலும், வெண்ணிலவின் தண்மை மண்டின நிழல்கூட ஒர் ஆறுதல் அளிப்பதாகவே அவனுக்குத் தோன்றியது. முத்துக்கள் எடுக்க வேண்டுமென்று இலட்சியம் கொண்டவன் கிளிஞ்சில்களை அலட்சியம் செய்ய வேண்டுமென்று நியதி ஒன்றும் இல்லையே!

ஆதிமூலத் தேவர் வந்தார். உடம்பையும் முகம் கைகால்களையும் வேர்வை நாற்றம் கழியக் கழுவி, நெற்றியில் நீறு தரித்து, உடல் தறிக்காத கும்மாளத்தோடுதான் அவர் காணப்பட்டார். படித்துப் பட்டமும் பெற்ற பட்டிக்காட்டு இளைஞனை வீரமணியை-பரம்பரைப் பணக்காரக் குடும்பத்தைச் சார்ந்த செல்லப் பிள்ளையான் வீரமணியை தன்னுடைய அருமை மாப்பிள்ளை யாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று கட்டி