பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203

26.3

செல்வப் பொண்னு பவளக்கொடியின் கழுத்திலே மூணுமுடிச்சுப் போட்டிடுவேனு, என்ன? பாவம்'அவனே என்னவோ ஒரு திகில் உணர்வு ஆட்டிப் படைத்தது. இனம் விளங்காத தவிப்பும் இனம் விளங்கிய கிலேசமும் அவனுள் பிசிறி தட்டிச் சிதறிச் சலனத்தின் உணர்வுகளைப் பொங்கிப் பிரிடச் செய்தன.

'தம்பி, எழுந்திரு. சாப்பிடுவோம்,' என்று துருகப்படுத்தினர் பெரியவர். அன்பு மகனிடம் அவனுக்குச் சம்பந்தம் பேசி முடித்திருக்கும் கங்காணியார் மகள் பவளக்கொடியைப் பற்றி அவனுடைய அபிப்பிராயத்தைக் கேட்டறிய வேண்டும். இந்தத் தார்மீக நியாயம் இப்போது தான் அவருடைய உள்ளத்திலே சுள்ளாப்பாக' உறைத்தது போலும்! இத்தகைய மானமாறுதலின் புண்ணியம் ராமையாவையே சார வேண்டும் என்ற ரகசியத்தை அவரது மனச்சான்று அறிந்து உணராமல் இருந்திருக்க நியாயம் இல்லைதான்!

'நீங்க சாப்பிடுங்க, அப்பா. எனக்கு வயிறு மந்தமாய் இருக்குது," என்று இட்டுக் கட்டி ஒரு பொய்யை வெளியிட்டான் அவன், . .

'வயசுப் பிள்ளை நீ. பசிச்சாலும், பசிக்காட்டி பும் வட்டியடியிலே குந்தி ஏந்திருச்சிடு வீரமணி, நாளைக்கு மணவறையிலே குந்தப் போற பிள்ளை நீ. வெறும் பிள்ளை இல்லே!-மாப்பிள்ளை; இந்தச் சங்கதியை அடிக்கொரு கடுத்தம் நீ மறுந்துப்புட லாமா?...உனக்கு நல்ல புத்தி படிச்சுக் கொடுக்க