பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

2 0 6

"ஒண்ணேப் பத்தாகப் பெருக்கிப் பார்க்கப் பழகி விட்டால், வாழ்க்கையை வாழ்க்கையாகப் பாவித்துப் புரிஞ்சுக்கிட்டு வாழ இயலும். உன் அம்மான், ஊகம், அந்தச்சிங்கப்பூரான் ராமையாத் தேவன் கொடுக்காத ரூபாய் இரண்டாயிரத்துக்கும் சேர்த்து என்கிட்டே புரோ நோட்டு எழுதி வாங்கிக் கிட்டதோடு, பிராதும் போட்டு டிகிரி'யும் பண்ணி வச்சிருக்கான். அவன் தெய்வத்துக்குப் பயப்படாமல் அன்றைக்குச் செஞ்ச அநியாயம் இன்றைக்கு அதோட கூலியை அனுபவிக்கிறது இன்னமுமா விளங்கல்லே?...ராமையா எனக்குப் 'படுத்தடி பண்ணின அந்த இரண்டாயிரத்துக்கும் கூடுதலான பெறுமதி கொண்ட அவைேட வைரச் சிமிக்கிகள் இரண்டும் தேடிப் போன மூலிகை காலிலே சிக்கின கதையாக இப்பைக்கு என்கையிலே சிக்கிகிடுச்சுதே, கண்டியா, தம்பி?”

ஆதிமூலம் மேலும் விநயமாகச் சிரித்தார்.

"அப்பா!' என்று விளித்தான் வீரமணி. பின்னர் சற்றே நின்ருன். பிறகு, அப்பா, இந்த வைரச் சிமிக்கிகள் இரண்டும் நான் கண்டெடுத்த தாக்கும். ஆகச்சே, இந்த விசயத்திலே உங்க விவ காரத்தைக் குட்டை குழப்பிப்பிடாதீங்க, அப்பா!' என்ருன் வீரமணி. ஊம், அதுகளை இங்கிட்டாலே என்கிட்டே கொடுங்க, அப்பா!' என்றும் வேண்டுதல் விடுத்தான் அவன்.

உள்ளங்கை வைரங்களென மின்னிப் பளிச் சிட்ட அந்த வைரச்சிமிக்கிகளை விழுங்கி விடுகிற