பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207

20 7

மாதிரி பார்வையிட்டார் பெரியவர். வைரத்தை விழுங்கி விடாத வரை, அவர் பாடு யோகந்தான்! 'தம்பி, என் திட்டத்திலே மண்ணைப் போட்டு மூடிடாதேப்பா!...இந்த வைரச் சிமிக்கிகள் என் கையிலேயே கைகாவலுக்கு இருக்கட்டும்டா, ராஜா!' என்று நையம் பாடிக்கெஞ்சினர் தேவர்.

'ஊகூம்; அந்த வைரச் சிமிக்கிகள் என்னேட அன்னத்தின் சொத்துங்க, அப்பா! அந்தச் சிமிக்கி களை நீங்க லவட்டிக்கிடி நான் ஒருக்காலும் அனுமதிக்கவே மாட்டேனுங்க, அப்பா!' என்று வைரம் தொனிக்கப் பேசிக் கொண்டே, அருமை அப்பாவின் கையிலிருந்த அந்த வைரச் சிமிக்கிகள் இரண்டையும் முறுக்குகளைப் பறிக்கும் வட்டப் பருந்து மாதிரி பறித்துக் கொண்டான் வீரமணி

அப்போது, கைவளைகள் கல கல வென: முழங்கும் குரல் கேட்டது.

ஆதிமூலத்தேவர் ஆத்திரத்துடன் திசை திரும்பினர்.

விரமணி ஆனந்தம் மேவ, பார்வையைத் திருப்பி விட்டான்.

அங்கே, உணர்ச்சிகளின் நாயகியாகத் திகழ்ந்த அன்னக்கொடி, மெளனப் புன்னகை மணக்க நின்று கொண்டிருந்தர்ள்!