பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209

209

தள்ளாடித் தடுமாற வைத்து விட்டது. மச்சினன் மகள் அன்னத்தின் அலங்காரச் சிமிக்கிகளையே பகடையாக்கி, மச்சினனே ஓட ஓட விரட்டத்துடிச்ச எனக்கு முன்னே, சிமிக்குகளுக்கு உடையவளான அன்னம் எப்படி இங்கிட்டு வந்திச்சாம்?...... தடயம் கிடைச்ச தடத்திலேயே ஒடோடி வந்திருக் குமா இந்தப் பொண்ணு?... இனிமேலே நான் ராமையாவைப் பழிக்குப் பழி வாங்க ஏது சாத்தியம்?...' என்று நினைத்து நெஞ்சம் மருள் கொண்டு நினைவுகள் மறுகிக் குறுக நின்ருர் அவர். "அத்தான்!” என்று உயிரை அழைத்திடும் உயிரின் உறவோடு அழைத்தாள் அன்னம். நிலா முற்றத்தை முற்றுகை இட்டிருந்த நிலவுப் பால் துரைகள் கரை தாண்டிக் கன்னியின் பவள மேனியில் பட்டுத் .ெ த நி த் து க் கொண்டே இருந்தன. -

'அன்னம்!” என்று பதில் குரல் கொடுத்தான் வீரமணி.

“நல்லா இருக்கீங்களா?” 'உன் புண்ணியத்திலே நல்லா இருக்கேன், அம்மான் மகளே! நீ...?”

“உங்க புண்ணியத்திலே நானும் நல்லாய்த். தான் இருக்கேனுங்க, அயித்தை மகனே!”

பேசிய அவள் பாசம் உணர்த்திய பாந்தமும், பேசாத அவள் நேசம் உணர்த்திய பந்தமும்