பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

2 12

ஒரு பாவமும் அறிய மாட்டாங்க. பின்னே, அவங்க மேலே ஏதுக்கு வீண் அபவாதத்தைப் போடுறீங்க? எங்க வெள்ளையைக் கட்டிப் போட்டவங்க நீங்க! இந்த உண்மையை நான் அறியாமல் இல்லே!...” என்று தெரிவித்தாள் அன்னம்,

ஆதிமூலம் சற்று நேரம் மெளனம் காத்தார். பிறகு, தப்புச் செய்கிறவங்க தண்டனையை அனு பவிச்சுத்தான் தீர வேணும்! புரிஞ்சுக்க, அன்னம்!" என்று புத்தி சொன்னர்.

'தப்புத் தண்டா செய்கிறவங்க கட்டாயம் தண்டனையை அனுபவிச்சுத்தானே தீர வேணும்?"

'ஒ!...ஆமா, ஆமா!'

அன்னத்தின் வாய்ச் சிரிப்பு வழி தடுமாறி வழிந்தது. மாமன்காரர் மறுகி நின்ற திசைக்கு அவள் தன் பார்வையைத் திசை திருப்பி, வீரமணி. யின் மீது நிலைக்கச் செய்தாள். 'எல்லாம் எனக்குப் புரியுமுங்க, மாமா!' என்ருள் அவள். அப்புறம், அத்தை மகனை ஏறிட்டு நோக்கினுள், எங்க அப்பா சொன்ன மாதிரி, எங்க வெள்ளைக் காளையை நல்ல தனமா எங்க க்ையிலே ஒப்படைச்சாக வேணு முங்க,' என்ருள். ஆதிமூலத்தின் மீது ஏவி விட் டிருந்த பார்வையை மாற்றி, அத்தை மகன் பேரில் ஏவி விட்டாள். "அத்தான், போயிட்டு வரட்டுங் களா?' என்ருள். -

உடன் இருந்த தந்தையையும் மறந்து, அன்னக் கொடியையே இமைக்காமல் பார்த்தான் வீரமணி.