பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213

露{器

பிறகு, தன் கையிலிருந்த வைரச் சிமிக்கிகளே அவளுடைய பார்வையில் படும்படியாக ஏந்தியபடி அன்னத்தையும் அப்பாவையும் ஒடுகிற ஒட்டத்தின் கதியோடு எடை போட்டான். அடி மனத்தில் ஏற். பட்ட மாறுதலின் விளைவாக, நியாயத்தின் அடிப் படையில் நல்லதொரு முடிவுக்கு வரவானன் அவன் "வேறே விசேஷம் ஒண்ணும் இல்லையா?” என்று எதையயா நினைவூட்ட விரும்பிக் கேட்டான் தேவர். மைந்தன்.

அன்னம் இந்தக் கேள்விக்கும் மெளனப் புன்ன கையையே விடையாகச் சிந்தினுள். சிந்தாத முத்துக்களாகப் பற்கள் காட்சியளித்தன.

'விசேஷத்தைச் சொல்ல வேண்டியவங்களும் சொல்லிக் காட்ட வேண்டியவங்களும் நீங்கதானுங். களே, அத்தான்?' என்ருள் அவள்,

அன்னக் கொடியை வீரமணி ஏறிட்டுப் பார்த்த நேரத்தில், தன் கையிலிருந்த வைரச் சிமிக்கிகளையே அன்னம் தொடுத்த விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்த காட்சியைக் கண்டான்! வைரச் சிமிக்கிகளைப் பற்றி உடைமைக்காரியான அன்னம் ஏன் மூச்சுப் பேச்சுக் காட்டக் காணுேம்? என்னை அப்பா சோதிக்கிறது போருதின்னு, அம்மான் மகளும் சோதிக்குதாங்காட்டி?... இவ்வாறு மனம் குமைந்தான். *

அப்பொழுது : பெரியவர் பெரிதாக ஒரு கனைப்புக் கனைத்தார் அது ஒரு சமிக்ஞை - அடையாளம். மகனைத் திசை

கா. நி-14