பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215

認 I 5

'காணி நிலம் வேண்டும்-பராசக்தி! காணி நிலம் வேண்டும்!-அங்கு

அாணில் அழகியதாய்-நன்மாடங்கள்

துய்ய நிறத்தினதாய்-அந்தக்

காணி நிலத்திடை-ஒர் மாளிகை

கட்டித்தர வேண்டும்!......”

பாட்டு திடுதிப்பென்று ஏன் நின்று விட்டது?

வீரமணி மருண்டான். தன் தகப்பனர் ஆவேசத்தோடு வானுெவியின் விசையை நிறுத்தி விட்ட அலங்கோலத்தைக் கண்டதும், அவனுடைய ரத்த நாளங்கள் துடித்தன. "அப்பா, நல்ல பாட் டாச்சுங்களே? நல்ல இடத்திலே ஏன் நிறுத்திப் பிட்டீங்க?' என்று ஆற்ருமையோடு வினவினுன்,

“நல்ல பாட்டை நல்ல இடத்திலே நிறுத்தினல் தான், அந்த நல்ல பாட்டோட நல்ல ஞாபகம் நம்ப நெஞ்சிலே சதா ஒலிச்சிக்கிட்டே இருக்கும்! சரி, சரி.பின்கட்டுப்பக்கம் கொஞ்சநேரம் வாயேன். எனக்கு நெஞ்சை என்னமோ பண்ணுது!’ என்று பரிதாபமாகக் கூறிவிட்டு, திறந்த மார்பைத் திறக் காமலே தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்

தேவர்.

வீரமணி பதறின்ை; துடித்தான் துவண் டான்; தவித்தான். பாசத்தை பாசத்தின் திமித்தம் நம்பினன். பாசத்தை நம்ப நிமித்தம’ கேட்க வேண்டுமா?-அவன் வரை பாசம் ஒரு பூவிலங்குதான்!-அப்பாவைத் தொடர்ந்தான். அன்னம், கொஞ்சம் பொறு. திரும்பிடுறேன்."