பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

2望む

அம்மான் ஏய்ச்சதுக்குப் பழிக்குப்பழி வாங்க நீங்க விரும்பினல், அதுக்கு ஊர் நாட்டிலே வழிக்கா

பஞ்சம் வந்திடும்?...'

வீரமணியின் பேச்சில் சூடு பறந்தது.

'இதுதான் உன் முடிவா?'

    • ණ්!’ ‘ -

'நீ இப்பைக்கு அந்த வைரச் சிமிக்கிகளே என்ன செய்யப் போறே?” -

'அது என் சொந்த விஷயம்-அது சம்பந்த மாய் உங்ககிட்டே இப்போ எதையும் சொல்ல ஆசைப்படல்லே!...” என்று வாழைப்பழத்தில் செருகிய சூரிக்கத்தியாகச் சொற்களைப் பாய்ச்சி ன்ை வீரமணி.

ஆதிமூலம் செயலற்று நின்று விட்டார். தலை முடிகள் தோளில் புரள, கோபம் ஆருமல் அங் கிருந்து வெளியேறினர்.

கொஞ்ச நாளாக அப்பாவின் நடத்தை ரொம்பவும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது! வீரமணி நெடுமூச்செறிந்தான். கையில் மறைந் திருந்த சிமிக்கிகளின் வைர ஒளி அவனது உள் ளுணர்வுகளைத் தொட்டும் தொடாமலும் உறுத்திக் கொண்டிருந்த சங்கடத்தை இனிமேலும் அவன் சோதனைப்படுத்த ஒப்பவில்லை. ஆகவே, வெளியேறி ஞன். நிலவுக் காற்று இதமாகவே இருந்தது. "அன்னம். அன்னம்!” என்று அன்போடும் பாசத் தோடும் நேசத்தோடும் விளித்தான்.