பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

*அழுவுறீங்களா?' "இல்லையே?’ "ஊம்; அழுவுறீங்க!' 'சரி, அழுவுறேன்தான்!' 'ஏனுங்க, மச்சான்!” 'என்னுேட விதி!' 'விதியாவது சதியாவதுங்க, அத்தான்!” 'விதியும் சதியும்தான், அம்மான் மகளே!' “என்ன சொல்லுறிங்க?" 'நடந்ததைச் சொல்லுறேன்; நடக்கிறதைச் செப்புறேன், அன்னம்!' உணர்ச்சிகளை வசப்படுத்த முடியாமல் அவனுடைய குரல் திணறியது. உள்ளங் கையிலிருந்த அந்த வைரச் சிமிக்கிகளை உள்ளங் கைக்குள்ளாகவே வைத்து உருட்டி விளையாடிக்

கொண்டிருந்தான் அவன்.

'நடக்க வேண்டியதைச் சொல்லுங்களேன்

ந டியதை இ! ל அத்தான்!”

'அது உன் கையிலேதான் இருக்குது, அன்னம்!’’ .

'இல்லீங்களே! அது உங்களோட கையிலே தான் இருக்காக்கும்!" -

'என் கையிலே இருக்குதாங் காட்டி? இல்லே; இல்லவே இல்லை!...என் கையிலே இப்பைக்கு

இருக்கிறது உன்னேட இந்த இரண்டு வைரச் சிமிக்கிகள் மட்டிலுந்தாளுக்கும்!'