பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233

33

பெரியவர் ஏளனமான அலட்சியத்தோடு சிங்கப்பூர்த்தேவரைப் பார்த்தார். பிறகு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, கையிலிருந்த வைரச் சிமிக்கியைக் கைக்குள்ளாகவே சமர்த்தாகவும் சாமர்த்தியமாகவும் குலுக்கிக் கொண்டு ஒர் அட்டகாசமான நிர்த்தாட்சண்யச் சிரிப்பைக் கொட்டிவிட்டுப் பேசினர்: -

"மச்சான்காரா...ராமையா! நீ எனக்குக் கை நீட்டிக் கை ரொக்கமாகக் கொடுக்காத-கொடுக் கிறதாகச் சொல்லி, கடைசியிலே கொடுக்காமல் ஏய்ச்சுப்பிட்ட அந்த ரெண்டாயிரம் ரூபாய்க்கும் சேர்த்து நீ என்கிட்டேயிருந்து புரோ நோட்டை முன்கூட்டியே மோசடியாய் எழுதி வாங்கிக் கிட்டே! கொடுத்த கடளுேட, கொடுக்காத கடன் ரூபாய் ரெண்டாயிரத்துக்கும் சேர்த்து அடாவடி யாய் கோர்ட்டு கச்சேரியிலே என் மேலே தாவா போட்டாய்!-நான் வாங்காத ரூபாய் ரெண் டாயிரத்துக்குச் சாட்சி வைக்க என் கையிலே ஆதாரம் இல்லாததனாலே, நீ கொடுக்காத பணத்துக்கும் சேர்த்து நான் உனக்குப் பணம் கட்டியாகத்தான் வேணும். இது சட்ட ரீதியான நீதி!-ஆன, சட்டத்துக்கு அப்பாலே உள்ள உன்னேட மனச்சாட்சி உன் மாதிரியே ஊமைத்தன மாய் இருந்துக்கிட்டே வருதே, அந்தப் பொல்லாத பாவத்துக்கு உண்டான கூலியை நீ அனுபவிக்கா மல் தப்பிச்சுக்கிடலாம்னு மனப்பால் குடிச்சிருப் பாய். ஆன, அந்தப் பாவத்தின் கூலியை நீ அனுபவிக்காமல் ஒருகாலும் தப்பவே வாய்க்காது.